search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மது பாட்டில்கள் பறிமுதல்"

    கோவையில் சட்ட விரோதமாக மதுபானங்கள் விற்பனை செய்ததாக 25 பேரை கைது செய்த போலீசார் 262 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
    கோவை:

    சூலூர் சட்டமன்ற தொகுதியில் நேற்று இடைத்தேர்தல் நடைபெற்றது. இதனை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்படுவதாக மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டிருந்தார். அதனை தொடர்ந்து டாஸ்மாக் கடைகள் நேற்று மூடப்பட்டன.

    இதற்கிடையே கோவை புறநகர் பகுதிகளான பேரூர், தொண்டாமுதூர், சிறுமுகை, சூலூர், கோட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் சட்ட விரோதமாக மதுபானங்கள் விற்பனை செய்ததாக 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

    அவர்களிடம் இருந்து 74 மது பானங்கள், ரூ.1,200 பணம் பறிமுதல் செய்யப்பட் டது. இதேபோல் கோவை மாநகர பகுதியான காட்டூர், சாய்பாபா காலணி, ராமநாத புரம், போதனூர், வெரைட்டி ஹால் ரோடு, பீளமேடு, சரவ ணம்பட்டி பகுதிகளில் மது விற்பனை செய்வதாக போலீ சாருக்கு தகவல் வந்தது.

    அதனை தொடர்ந்து மது விற்பனை செய்த 16 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப் பட்டு, அவர்களிடம் இருந்து 188 மது பாட்டில்கள் பறிமு தல் செய்யப்பட்டது. சூலூர் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு டாஸ்மாக் கடைக ளுக்கு விடுமுறை விடப்பட்ட நிலையில் மாவட்டம் முழுவ தும் மது விற்றதாக 25 பேர் கைது செய்யப்பட்டு, மொத் தம் 262 மது பாட்டில்கள் பறி முதல் செய்யப்பட்டுள்ளது.
    அதியமான்கோட்டையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அனுமதியின்றி மது விற்பனை செய்த 3 பேரை கைது செய்தனர்.
    தருமபுரி:

    அதியமான்கோட்டை போலீசாருக்கு அரசுக்கு புறம்பாக மது விற்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த பெருமா என்பவர் மதுவை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பெருமாவை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 8 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 

    இதேபோன்று பென்னாகரம் போலீசார் நடத்திய சோதனையில் அதே பகுதியை சேர்ந்த சத்தியா மற்றும் கணேசன் என்பவர்களை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 19 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
    குளித்தலையில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
    தோகைமலை

    கரூர் மாவட்டம் குளித்தலை சுங்ககேட் டாஸ்மாக் கடை அருகே முசிறி தண்டலைப்புத்தூரை சேர்ந்த செல்லதுரை மகன் சுப்பிரமணியன் (32) என்பவர் மது விற்பதாக அப்பகுதி மக்கள் கொடுத்த புகாரின் பேரில், குளித்தலை போலீசார் விசாரணை நடத்தி அவரை கைது செய்தார். 

    அதேபோல் குளித்தலையை அடுத்த வை.புதூரை சேர்ந்த மணி மகன் வீரமலை(42) என்பவர் தனது வீட்டில் மதுபான பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக அப்பகுதி மக்கள் கொடுத்த புகாரின் பேரில், குளித்தலை போலீசார் வழக்குபதிவு செய்து வீரமலையை கைது செய்தனர். இருவரிடம் இருந்தும் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்தார். 

    மேலும் மணப்பாறை பெரியப்பட்டியை சேர்ந்த ராமசாமி மகன் சண்முகவேல்(37) என்பவர், தோகைமலை போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட நாடக்காப்பட்டி பஸ் நிறுத்தத்தில் மது விற்பனை செய்வதாக அப்பகுதி மக்கள் கொடுத்த புகாரின்பேரில் தோகைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து சண்முகவேலை கைது செய்தனர்.
    சூளகிரி பகுதியில் அரசு மதுக்கடைகளில் மதுபாட்டில்கள் அதிகமாக வாங்கி கூடுதல் விலைக்கு மதுவிற்றவர் சொகுசு காருடன் கைது செய்யப்பட்டார்.
    வேப்பனஹள்ளி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி தாலுகா பீளாலம் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தன் (வயது40). இவர் அடிக்கடி அரசு மதுக்கடைகளில் மதுபாட்டில்கள் அதிகமாக வாங்கி வருவதாக கூறப்படுகிறது. மேலும், இதனை அதிக விலைக்கு விற்று வந்தார். 

    இது குறித்து ரகசிய தகவல் அறிந்த சூளகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் நேற்று மாலை பேரிகை சாலையில் கோவிந்தன் மறைவான இடத்தில் மது விற்றதை கண்டுபிடித்து அவரை கையும், களவுமாக பிடித்தார்.

    போலீசார் கோவிந்தனிடமிருந்து சொகுசு கார் மற்றும் ரூ. 6,000 மதிப்புள்ள 57 மது பாட்டிகள்களை பறிமுதல் செய்தனர்.
    அந்தியூர் அருகே அனுமதியின்றி மது விற்பனை செய்த 2 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
    அந்தியூர்:

    காந்தி பிறந்த நாள் விழா நாடு முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது. அதன்படி ஈரோடு மாவட்டம் முழுவதும் காந்தி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி நேற்று மாவட்டம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது.

    இதை பயன்படுத்தி அந்தியூர் பகுதியில் மது பாட்டில்களை பதுக்கி விற்பனை செய்வதாக அந்தியூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் தலைமையில் போலீசார் அந்தியூர் பஸ் நிலையம் அருகில் ரோந்து சென்றனர். அப்போது போலீசாரை கண்டதும் ஒருவர் அங்கிருந்த ஓட முயன்றார். உடனே போலீசார் அந்த நபரை பிடித்து விசாரித்தனர்.

    விசாரணையில், ‘அவர் அந்தியூர் தேர் வீதியை சேர்ந்த சங்கர் (வயது 37) என்பதும், அவர் மது பாட்டில்களை வாங்கி பதுக்கி வைத்து விற்றதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து சங்கரை போலீசார் கைது செய்ததுடன், அவரிடம் இருந்து 50 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

    இதேபோல் அந்தியூர் கருமலையான் கோவில் பகுதியில் மது விற்றதாக அந்தியூர் புதுக்காடு பகுதியை சேர்ந்த சின்னதம்பி (42) என்பவரை போலீசார் கைது செய்ததுடன், அவரிடம் இருந்து 50 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். 
    சுவாமிமலையில் கள்ளத்தனமாக வீட்டில் பதுக்கி வைத்த 2400 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து வாலிபரை கைது செய்தனர்.

    சுவாமிமலை:

    சுவாமிமலை பகுதி சரவண பொய்கை தெருவை சேர்ந்தவர் வினோத்(வயது27). இவர் சுவாமிமலை சுற்று வட்டாரப் பகுதிகளில் கள்ளத்தனமாக மது விற்பனை செய்து வருவதாக இன்ஸபெக்டர் ராமமூர்த்திக்கு ரகசிய தகவல் வந்துள்ளது.

    இதையடுத்து இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் காசியய்யா, ஏட்டு மாரியப்பன் மற்றும் போலீசார் இன்று காலை 8 மணியளவில் சரவண பொய்கை தெருவிற்கு சென்று வினோத் வீட்டருகில் மறைந்திருந்து கண்காணித்தனர்.

    அப்போது வினோத் மதுபாட்டில்களை விற்பனைக்கு எடுத்துக் கொண்டு வீட்டில் இருந்து வெளியில் வரும்போது அவரை பிடித்து விசாரித்தனர். மேலும் அவரது வீட்டில் பின்புறம் நடத்திய சோதனையில் ஒரு பெட்டிக்கு 48 பாட்டில்கள் கொண்ட 50 அட்டைபெட்டிகளை போலீசார் கைப்பற்றினர். அதில் 2400 மதுபாட்டில்கள் இருப்பது தெரியவந்தது. அதன் மதிப்பு ரூ. 1 லட்சத்து 50 ஆயிரமாகும் என்று போலீசார் தெரிவித்தனர்.

    கடந்த சில நாட்களாக பள்ளி, கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறையை ஒட்டி சுவாமிமலைக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இதனால் வினோத் அதிகளவில் மதுபாட்டில்களை வாங்கி வீட்டில் பதுக்கி வைத்து கள்ளத்தனமாக கூடுதல் விலைக்கு விற்றது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மதுபாட்டிகளை பறிமுதல் செய்து, வழக்குப்பதிந்து வினோத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வத்தலக்குண்டு பகுதியில் தனிப்படை போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் 180 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    வத்தலக்குண்டு:

    தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மதியம் 12 மணிக்குதான் திறக்க வேண்டும். ஆனால் வத்தலக்குண்டு பகுதியில் டாஸ்மாக் கடை பார்களில் பணியாற்றும் ஊழியர்கள் மது பாட்டில்களை மொத்தமாக கொள்முதல் செய்து குடிமகன்களுக்கு 24 மணி நேரமும் தங்கு தடையின்றி சேவைகளை வழங்கி வருகின்றனர்.

    கூடுதல் விலைக்கு விற்ற போதும் மதுவுக்கு அடிமையான தொழிலாளர்கள் காலை முதலே டாஸ்மாக் கடைகளில் விழுந்து கிடக்கின்றனர். மேலும் குடிபோதையில் பஸ்நிலையம் மற்றும் நகர் பகுதியில் ஆங்காங்கே அரை நிர்வாண கோலத்தில் படுத்து விடுவதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

    எனவே சட்ட விரோதமாக மது விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.

    திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தனிப்படை போலீசார் வத்தலக்குண்டு நகர் பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர். இதில் டாஸ்மாக் கடை பார்களில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 180 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    மேலும் மது பதுக்கிய சகோதரர்கள் உள்பட 4 பேரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அனுமதியின்றி மது விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.

    புன்னம்சத்திரம் அருகே பல்வேறு இடங்களில் அனுமதியின்றி மது விற்ற 3 பெண்களை போலீசார் கைது செய்தனர்.
    வேலாயுதம்பாளையம்:

    கரூர் மாவட்டம், புன்னம் சத்திரம் அருகே பெரியரங்கம் பாளையத்தைச் சேர்ந்தவர் வளர்மதி (45). இவரது வீட்டின் அருகே அனுமதியன்றி மது பாட்டில்கள் விற்பனை செய்து வருவதாக வேலாயுதம் பாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்து. 

    தகவலின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்த போது அங்கு வளர்மதி மது பாட்டில்களை வைத்து விற்பனை செய்து கொண்டிருப்பது தெரியவந்தது. உடனே போலீசார் வளர்மதியை கைது செய்து அவரிடமிருந்து 5 மதுப்பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    அதேபோல், கந்தம்பாளையம் சேர்ந்தவர்கள் சுலோச்சனா (40), சாந்தாமணி (55). இவர்கள் 2 பேரும் அதே பகுதியில் வெவ்வேறு இடங்களில் அனுமதியின்றி மதுபாட்டில்கள் விற்பனை செய்து வருவதாக வேலாயுதம்பாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
     
    தகவலின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்த போது அங்கு சுலோச்சனா மற்றும் சாந்தாமணி மது பாட்டில்களை வைத்து விற்பனை செய்து கொண்டிருப்பது தெரியவந்தது. உடனே போலீசார் சுலோச்சனாவையும், சாந்தாமணியையும் கைது செய்து அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த 10 மதுப்பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
    தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் திருட்டுத்தனமாக மதுவிற்ற 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

    ராஜபாளையம்:

    விருதுநகர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், திருட்டு மது விற்பனை நடைபெறுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜ ராஜனுக்கு தகவல் கிடைத்தது.

    அவரது உத்தரவின் பேரில் ராஜபாளையம் சரகத்தில் துணை சூப்பிரண்டு ரவிச்சந்திரன் மேற்பார்வையில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

    தெற்கு போலீஸ் இன்ஸ் பெக்டர் பவுல்ஏசுதாஸ், சப்-இன்ஸ்பெக்டர்கள் அருண்குமார், மூவேந்திரன், திருமலைராஜா மற்றும் போலீசார் ரோந்து சென்றபோது சங்கரன் கோவில் முக்கு பகுதியில் உள்ள கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுவது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்ததோடு, கடை உரிமையாளர் முருகனையும் கைது செய்தனர்.

    இதேபோல் அக்னி, சரவணன் (48) ஆகியோரும் புகையிலை பொருட்கள் விற்றதாக கைது செய்யப்பட்டனர்.

    சேத்தூர் புறக்காவல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமசாமி தலைமையிலான போலீசார் ரோந்து சென்றபோது சுந்தர் ராஜபுரம் பகுதியில் ஒரு கடையில் திருட்டுத்தனமாக மது விற்கப்படுவது தெரிய வந்தது. அதனை விற்றதாக போதராஜ் (40) என்பவரை கைது செய்த போலீசார் 20 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

    தளவாய்புரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் பெருமள்சாமி, ரெங்கன் மற்றும் போலீசார் முறம்பு பகுதியில் மது விற்றதாக நாகராஜ் (27) என்பவரையும் சேத்தூர் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ், சொக்கநாதன் புத்தூர் பகுதியில் மாரிமுத்து (29) என்பவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    ×